லாரி மீது கார் மோதி கோர விபத்து - 4 பேர் பலி

விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-06 15:15 IST

ஜெய்ப்பூர்,

உத்தரபிரதேசத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு நேற்று இரவு கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானின் பரன் மாவட்டம் கஜன்புரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்