பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டம் பரத் நகரில் இருந்து தோடாவுக்கு இன்று பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 25க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பண்டா நகரில் மலைப்பகுதியில் சென்றுக்ண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.