இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

Update:2025-05-12 09:08 IST
Live Updates - Page 2
2025-05-12 13:44 GMT

மங்கல தேவி கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி தமிழக-கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார்.

2025-05-12 12:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், கருங்குழி, படாளம் மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் தொழுப்பேடு, ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் மிதமான மழைப பெய்தது.

2025-05-12 12:34 GMT

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றாதாக ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில் ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

2025-05-12 12:10 GMT

அரக்கோணம் அருகே பலத்த காற்றால் உயர்மின் அழுத்த கம்பி விழுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் அருகே மணவூர் - திருவாலங்காடு இடையே மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளதால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக்கோளாறால் நடுவழியில் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டுள்ளது. சேவைகள் பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மின்சார ரெயில் கோளாறை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

2025-05-12 11:53 GMT

5 நாள் பயணமாக உதகை சென்றைடந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

2025-05-12 11:28 GMT

தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று மாலையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.8,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

2025-05-12 11:25 GMT

சென்னை பூந்தமல்லி அருகே பிரியன் என்ற 14 வயது சிறுவன் ஓட்டிய இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில், பிரியன் பலியானான். உடன் சென்ற 2 நண்பர்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2025-05-12 10:59 GMT

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லே            சானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025-05-12 10:55 GMT

பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற நாளை (செவ்வாய் கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை முதல் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் ரூ.275 செலுத்த வேண்டும். நகல் பெற்றவுடன் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.

2025-05-12 10:44 GMT

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்