இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்..12-05-2025

Update:2025-05-12 09:08 IST
Live Updates - Page 3
2025-05-12 10:33 GMT

முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது பற்றி அவருடைய மழலைகால பயிற்சியாளரான ராஜ்குமார் சர்மா கூறும்போது, இந்திய கிரிக்கெட்டுக்கு மிக பெரிய அளவில் பங்காற்றியதற்காக அவருக்கு என்னுடைய வணக்கங்கள். நாட்டுக்காக அவர் செய்த விசயங்களுக்காகவும் மற்றும் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக செய்துள்ள விசயங்களுக்காகவும், அவரை குறித்து நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

2025-05-12 10:31 GMT

கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் செய்தியாளர்களிடம் கூறும்போது, அனைத்து தளங்களில் இருந்தும் வந்த தாக்குதல்களை முறியடித்து உள்ளோம். கடற்படை கண்காணிப்பு தொடர்கிறது. ஆபத்து ஏதேனும் வருகிறது என்றால் உடனடியாக கண்டுபிடித்து முறியடிக்கப்படும்.

வணிக, போர் விமானங்களை அடையாளம் காணும் உயர் தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது என கூறியுள்ளார். முப்படைகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தது. அதனால், எதிரி விமானங்களால் நம்மை நெருங்க கூட முடியவில்லை. எதிரியை பல 100 கி.மீ. தொலைவிலேயே நிறுத்தி விட்டோம் என பெருமிதத்துடன் கூறினார்.

2025-05-12 10:10 GMT

திரிபுராவின் அகர்தலா நகரில் முதல்-மந்திரி மாணிக் சாஹா இன்று கூறும்போது, இன்றைய தினம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் (நவீன செவிலியத்தின் நிறுவனர்) பிறந்த ஆண்டுதினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

திரிபுராவில், இந்த தினம், நர்சிங் கவுன்சிலின் கீழ் கடைப்பிடிக்கப்படுகிறது. செவிலியத்துடன் தொடர்புடைய அனைவரும் இன்று கூடியுள்ளனர்.

இது ஓர் உன்னத தொழில். இந்த தருணத்தில் செவிலிய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

2025-05-12 09:16 GMT

விமானபடையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகிய முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேட்டியளித்து வருகின்றனர்.

2025-05-12 08:50 GMT

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என அதுபற்றிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

2025-05-12 06:18 GMT

டெஸ்ட் கிரிக்கெட்  போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறிவித்துள்ளார்.

2025-05-12 05:34 GMT

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கென சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நிறுவும் பட்சத்தில் இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவியாக இந்த சேட்டிலைட் திகழும் என்றும் விண்வெளியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து நிற்கும் என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

2025-05-12 05:07 GMT

முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், முப்படைகளின் இயக்குநர் ஜெனரல் நடத்தும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்