இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 14-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-14 09:33 IST


Live Updates
2025-04-14 14:30 GMT

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் வாய்க்காலில் மூழ்கி 3 சிறுவர்கள் உபயத்துல்லா(8), முகமது அபில்(10), முகமது பாசிக்(13) உயிரிழந்தனர். 3 மணிநேர தேடலுக்கு பின் 3 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

2025-04-14 13:52 GMT

லக்னோவுக்கு எதிரான ஆட்டம்: சென்னை அணியில் அஸ்வினுக்கு இடமில்லை

2025-04-14 13:40 GMT

ஒகேனக்கல்லுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த 2 சிறுமிகள், காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

2025-04-14 13:32 GMT

ஐ.பி.எல்.: லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

2025-04-14 13:14 GMT

ராமேஸ்வரம் : தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும் கடல் சீற்றத்தால் 6 அடிக்கு மேல் எழும் அலைகள். தடுப்பு கற்களை தாண்டி சாலைக்கு வரும் கடல்நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

2025-04-14 13:13 GMT

சென்னை வேளச்சேரியில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்த காவலர் மீது மது போதையில் இருந்த திமுகவினர், காவலரை கடுமையாகத் தாக்கியிருக்கும் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

2025-04-14 12:21 GMT

விடுமுறை தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கொடைக்கானலில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் முயற்சியில் 1000 வாகனங்கள் நிறுத்துமளவிற்கு தற்காலிக பார்க்கிங் திறக்கப்பட்டுள்ளது.

2025-04-14 12:20 GMT

பெரம்பலூர்: வெறிநாய் கடித்ததில் படுகாயமுற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவியை சந்தித்து நலம் விசாரித்தார் அமைச்சர் சிவசங்கர்.

2025-04-14 11:36 GMT

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

2025-04-14 11:27 GMT

பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், டாக்டர் ராமதாஸின் முடிவை விமர்சித்த திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி திலகபாமாவிற்கு ஒன்றும் தெரியாது.

கட்சியை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி திலகபாமா. போராட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என எதிலும் கலந்து கொள்ளாதவர் அவர் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்