இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 27-04-2025

Update:2025-04-27 10:34 IST
Live Updates - Page 3
2025-04-27 09:51 GMT

ஐ.பி.எல்.: மும்பைக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு


டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

லக்னோ அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியில் 2 மாற்றங்களாக சாண்ட்னர் நீக்கப்பட்டு கரண் சர்மா, கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


2025-04-27 09:37 GMT

2வது நாள் கருத்தரங்கு கூட்டம்.. புறப்பட்டார் விஜய்

கோவையில் 2ம் நாளாக நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 8,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

தொண்டர்களை ஒழுங்குபடுத்தி உள்ளே பவுன்சர்கள் அனுமதித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் வரும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி விஜய் வரக்கூடிய சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் 2வது நாள் கருத்தரங்கு கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். விஜய்யின் பிரசார வாகனத்தை சூழ்ந்து கொண்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர். விஜய்-யின் வாகனத்திற்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

2025-04-27 09:30 GMT

'கேஜிஎப்' பட நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நானி


நடிகர் நானி, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


2025-04-27 09:28 GMT

தமிழகத்தில் மே 3-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு


தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதனால் 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


2025-04-27 09:26 GMT

மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


மாலை 4 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, தூத்துக்குடி. சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, நாகை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


2025-04-27 09:25 GMT

46வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சூர்யா


'ரெட்ரோ' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய சூர்யா, தனது 46-வது படம் குறித்த அறிவிப்பை பகிர்ந்தார். அதன்படி, 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லுரியுடன் கை கோர்க்க உள்ளதாகவும் அப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாகவும் கூறினார்.


2025-04-27 08:19 GMT

  • காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்
  • பயங்கரவாத தாக்குதலுக்கு சீனா தான் காரணம்
  • வக்புக்காக போராடுபவர்கள் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசுவதில்லை
  • பாகிஸ்தான் ஒரு மதக்கலவர பூமி, சிந்து நதிநீரை தரக்கூடாது
  • பிரதமர் மோடி சரியான பதிலடி கொடுக்கப் போகிறார்
  • பாகிஸ்தான், சீனாவை உலக நாடுகள் ஒதுக்கி வைக்க வேண்டும்"- மதுரை ஆதீனம்

2025-04-27 07:41 GMT

  •  மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த காவல் துறைக்கு கண்டனம்
  • துணை முதலமைச்சர் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா?
  • தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்
  • திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார், அவர் எப்படி அதிமுக, விஜய் கதவை அடைக்க முடியும்
  • திருமாவளவன் அவர் வீட்டு கதவை அடைக்கட்டும், அடுத்த வீட்டை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

2025-04-27 06:30 GMT

  • 2 நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம்
  • கடும் வெயிலிலும் குவிந்து வரும் தவெக தொண்டர்கள்
  • காலை முதலே வரிசைக்கட்டி நிற்கும் தொண்டர்கள்
  • ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி கருத்தரங்கு
  • பிற்பகல் தொடங்கும் நிகழ்ச்சிக்கு காலையிலேயே வந்த தொண்டர்கள்

2025-04-27 05:49 GMT

காஷ்மீர், பஹல்காம் தாக்குதல் விவகாரம், உள்துறை அமைச்சகம் உத்தரவின்படி தேசிய புலனாய்வு முகமை முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்