பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் தேர்தல்: தேஜஸ்வி யாதவ் வெற்றி முகம்
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஹோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் 13 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 30 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், 29-வது சுற்று முடிந்துள்ளது. இதனால் தேஜஸ்வி யாதவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
பீகாரில் அடுத்த முதல் மந்திரி யார்? - நீடிக்கும் குழப்பம்
பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சராக நீடிப்பார் என ஜேடியு கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, சிறிது நேரத்தில் நீக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பீகாரில் அடுத்த முதல் மந்திரி யார் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம் என பாஜக கூறி இருந்தது. நிதிஷ்குமாரை மையப்படுத்தி சட்டமன்ற தேர்தலை பாஜக சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பாஜக 95 தொகுதிகளிலும், ஜேடியு 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் நிலையில் யார் முதலமைச்சர் என்பதில் நீடிக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
பாஜகவின் வசம் இருந்த அன்டா தொகுதியை காங்கிரசின் பிரமோத் ஜெயின் பயா வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் கன்வரால் மினா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடந்தது. ராஜஸ்தானின் அன்டா தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் பெரும் பின்னடைவை சந்தித்த காங்கிரஸுக்கு ராஜஸ்தான் இடைத்தேர்தல் வெற்றி ஆறுதலாக அமைந்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முனனிலை
பீகார் தேர்தலில் ரஹோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மொத்தம் 30 சுற்றுள்ள உள்ள நிலையில் 24-வது சுற்றில் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் . தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி கட்சி 82 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 26 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பீகார் தேர்தல்: ஜேடியு வெற்றி பெற்ற தொகுதிகள்
பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இதுவரை 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கல்யாண்பூர், அலாவுலி, ஹர்னாட், மொகாமா, பெலகஞ்ச் தொகுதிகளில் ஜே.டி.யு வெற்றி பெற்றுள்ளது.
பீகாரில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை
பீகாரில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது நிலவரப்படி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
* கிஷன் கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முகமது கமுருல் ஹோடா 77,342 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
* மணிஹாரி தொகுதியில் காங்கிரசின் மனோகர் பிரசாத் சிங் 66,394 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
* பகல்பூர் மற்றும் அராரிய தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தற்போது முன்னிலை பெற்றுள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை
பீகார் தேர்தலில் ரஹோபூர் தொகுதியில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். தேஜஸ்வி யாதவ் 19-வது சுற்று முடிவில் 1,186 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலவரம்:-
தேசிய ஜனநாயக கூட்டணி - 207 ( பா.ஜ.க. - 95 , ஜே.டி.யு. - 84 , எல்.ஜே.பி. - 19, ஆர்.எல்.எம். - 4 , மற்றவை - 5)
இந்தியா கூட்டணி - 29 (ஆர்.ஜே.டி. - 25 , காங்கிரஸ் - 5 , இடது சாரிகள் - 2)
பகுஜன் சமாஜ் கட்சி - 1
ஜன் சுராஜ் -0
மற்றவை - 6
கல்யாண்பூரில் ஜேடியு வேட்பாளர் வெற்றி
பீகார் சட்டமன்ற தேர்தலில் கல்யாண்பூர் தொகுதியில் ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் மஹேஸ்வர் ஹஸாரி வெற்றி பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் வேட்பாளர் ரஞ்சித் குமார் ராமை 38,586 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் மஹேஸ்வர் ஹஸாரி. வெற்றி பெற்ற ஜேடியு வேட்பாளர் மஹேஸ்வர் ஹசாரி மொத்தம் 1,18,162 வாக்குகளை பெற்றுள்ளார்.
பீகாரில் காங்கிரஸ் கடும் பின்னடைவு
61 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ரகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவ் 9,705 வாக்குகளில் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வருகிறார்.