பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்.டி.ஏ. கூட்டணி: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக
பீகார் சட்டசபை தேர்தல்: விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை.. யார் யார் முன்னிலை..
1. ஜஞ்சர்பூரில் பாஜகவின் நிதிஷ் மிஸ்ரா முன்னிலை வகிக்கிறார்
2. ராஜ்நகரில் பாஜகவின் சுஜித் பாஸ்வான் முன்னிலை வகிக்கிறார்
3. கஜௌலியில் ஆர்ஜேடியின் பிரஜ்கிஷோர் யாதவ் முன்னிலையில் உள்ளார்
4. ஹர்லாகியில் ஜேடியுவின் சுதான்ஷு முன்னிலையில் உள்ளார்
5. பேனிப்பட்டியில் காங்கிரஸின் நளினி ரஞ்சன் ஜா முன்னிலை வகிக்கிறார்
6. பாபுபர்ஹியில் ஜேடி(யு)வின் மீனா காமத் முன்னிலை வகிக்கிறார்
7. புல்பரஸில் ஷீலா மண்டல் முன்னிலை வகிக்கிறது
8. லௌகாஹாவில் JD(U) முன்னிலை வகிக்கிறது
9. பிஸ்பியில் பாஜகவின் ஹரிபூஷன் தாக்கூர் பச்சால் முன்னிலை வகிக்கிறார்
10. ஹாஜிபூரில் பாஜகவின் அவதேஷ் சிங் முன்னிலை வகிக்கிறார்
தற்போதய முன்னிலை நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 162
இந்தியா கூட்டணி - 76
ஜன் சுராஜ் -3
மற்றவை - 2
பீகார் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை
பீகார் சட்டசபை தேர்தல் தொடக்க நிலை வாக்கு எண்ணிக்கையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
காலை 9 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி, 140 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இந்தியா கூட்டணியில் 59 இடங்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 9 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல்: தேஜஸ்வி யாதவ் தொடர்ந்து முன்னிலை
பீகார் தேர்தல் முன்னிலை நிலவரம்: ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு யாதவின் மகன்கள் தேஜஸ்வி மற்றும் தேஜ் பிரதாப் ஆகியோர் ரகோபூர் மற்றும் மஹுவா தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
தற்போதைய முன்னிலை நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 131
இந்தியா கூட்டணி - 88
ஜன் சுராஜ் - 5
மற்றவை - 6
பீகார் சட்டசபை தேர்தல்: அலி நகர் தொகுதியில் பாஜகவின் மைதிலி தாக்கூர் முன்னிலை
பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அலிநகர் தொகுதியில் பாஜகவின் மைதிலி தாக்கூர் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதய முன்னிலை நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 123
இந்தியா கூட்டணி - 80
ஜன் சுராஜ் - 5
மற்றவை - 7
பீகார் சட்டசபை தேர்தல்: தற்போதைய முன்னிலை நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 108
இந்தியா கூட்டணி - 70
ஜன் சுராஜ் - 5
மற்றவை - 7
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பு
பீகார் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை எனும் நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல்: தற்போதைய முன்னணி நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 75
இந்தியா கூட்டணி - 50
ஜன் சுராஜ் - 3
மற்றவை - 2
பீகார் சட்டசபை தேர்தல்: தேஜஸ்வி யாதவ் முன்னிலை
பீகார் சட்டசபை தேர்தலில் ராகோபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி ஆர்.ஜே.டி.தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகித்து வருகிறார்.
பீகார் சட்டசபை தேர்தல்: ஆட்சி அதிகாரம் யாருக்கு - தற்போதைய முன்னணி நிலவரம்
தேசிய ஜனநாயக கூட்டணி - 51
இந்தியா கூட்டணி - 27
ஜன் சுராஜ் - 2
மற்றவை - 3
தேசிய ஜனநாயக கூட்டணி - இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக வாக்குகள் (67.13 சதவீதம்) பதிவான நிலையில், ஆட்சியை பிடிக்க தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2020 பேரவைத் தேர்தலில் 15 தொகுதிகளில் (தேசிய ஜனநாயக கூட்டணி -125, இந்தியா -110) ஆட்சியை தவற விட்டது இந்தியா கூட்டணி. தற்போது தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணியே மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கணிப்பு வெளியாகி இருந்தது.