சுவரில் வரைந்த யானை ஓவியத்தை கண்டு மிரண்ட நிஜ யானை.. அடுத்து நடந்த சுவாரஸ்யம்

தடுப்புச்சுவரில் வரையப்பட்டிருந்த யானை ஓவியத்தை கண்டு நிஜ காட்டு யானை திடீரென மிரண்டது.;

Update:2025-09-19 10:49 IST

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனத்துறை சோதனை சாவடி அருகே சாலையோரம் தடுப்புச்சுவரில் வனத்துறை சார்பில் யானைகள் ஓவியம் வரையப்பட்டு இருந்தது. அதில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் பகுதி என எச்சரிக்கும் வாசகங்களும் உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை சோதனை சாவடி அருகே காட்டு யானை ஒன்று சாலையை கடந்தது. அப்போது ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல் தடுப்புச்சுவரில் வரைந்துள்ள யானை ஓவியத்தை கண்டு நிஜ காட்டு யானை திடீரென மிரண்டது.

பின்னர் சுதாரித்தக்கொண்ட காட்டு யானை, தடுப்புச்சுவரை துதிக்கையால் வருடியவாறு இருந்தது. அதன் பின்னரே அது யானை உருவம் என காட்டு யானை நினைத்து பயத்தை போக்கியது. பின்னர் ஓவிய யானையின் துதிக்கையை, தனது துதிக்கையால் வருடியவாறு அங்கிருந்து சென்றது. இந்த காட்சியை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது, வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்