கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பதிவு: பதிவிட்ட சில நிமிடங்களிலேயே நீக்கம்

ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என தெரிவித்துள்ளார்.;

Update:2025-09-30 00:13 IST

சென்னை,

த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அவரது எக்ஸ் பதிவை நீக்கி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்