வங்கக்கடலில் 27-ந் தேதி புயல் சின்னம்: மீனவர்களுக்கு கடலோர காவல்படை எச்சரிக்கை

புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப வேண்டும் என கடலோர காவல் படை எச்சரித்து உள்ளது.;

Update:2025-10-25 01:50 IST

கோப்புப்படம்

சென்னை,

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்காள விரிகுடாவில் மோசமான வானிலை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது, 25-ந் தேதி (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 26-ந் தேதி (நாளை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

27-ந் தேதி தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்காள விரிகுடாவை ஒட்டிய பகுதியில் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. எனவே, கடல் பயணிகள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடலோர காவல்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார் நிலையங்கள் மீனவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்து வருகின்றன.

மேலும், மீன்பிடி படகுகள் பாதுகாப்புக்காக அருகிலுள்ள துறைமுகத்திற்கு விரைவில் திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 985 மீன்பிடி படகுகளை அருகிலுள்ள துறைமுகங்களுக்கு கடலோர காவல்படை அனுப்பி வைத்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்