திண்டுக்கல்: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.;

Update:2025-04-25 13:55 IST

திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமலைபுதூர் பகுதியைச் சேர்ந்த தாமஸ் பெர்னான்டோ (வயது 28) என்பவரை திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, நீதிமன்ற ஏட்டு விஜயலட்சுமி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் முயற்சியால் நேற்று (24.04.2025) திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி தாமஸ் பெர்னாண்டோவுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்தாண்டு இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 19 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்