பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்; ஓ.பன்னீர் செல்வம்
செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்;
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக 2, 3 அணிகளாக பிரிந்ததில் இருந்து தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தோல்வியில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அதிமுக இணைய வேண்டும் என்பது தொண்டர்கள், பொதுமக்களின் மனநிலையாக உள்ளது.
செங்கோட்டையனை அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கிய பழனிசாமியின் நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கூறியவர்கள் மீது ஜெயலலிதா, எம்ஜிஆர் ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை. செங்கோட்டையனின் விடாமுயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.