சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

தர்மபுரி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-10-01 20:28 IST

கோப்புப்படம் 

தர்மபுரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார் (33 வயது). தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது பற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடத்தப்பட்ட சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக கடத்தல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருள்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அருள்குமார் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதியானது. இதனால் அருள்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்