ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை: மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில்
மேற்கு வங்காளத்துக்கு கோவை வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.;
கோவை,
சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை பண்டிகை நாட்களை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 17-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் -சந்த்ராகாச்சி( மேற்கு வங்க மாநிலம்)சிறப்பு ரெயில் (வண்டி எண்:- 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு சந்த்ராகாச்சி ரெயில் நிலையத்தை சென்றடையும்.
மறு மார்க்கமாக வருகிற 8-ந் தேதி முதல் அக்டோபர் 20 வரை திங்கட்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு சந்த்ராகாச்சி நிலையத்தில் இருந்து புறப்படும் சந்த்ராகாச்சி-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரெயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தனி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜ முந்திரி, புவனேஸ்வர், கட்டாக் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.