நெல்லை மாநகரில் பாலியல் குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் ஒருவர், ஒரு குழந்தைக்கு பாலியல் தாக்குதல் கொடுத்து உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.;
திருநெல்வேலி, பெருமாள்புரம், அன்பு நகர், T.N.H.B. காலனியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் மாரியப்பன் (வயது 38) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு பாலியல் தாக்குதல் கொடுத்து உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்து பீதியையும், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த மாரியப்பன் என்ற "பாலியல் குற்றவாளி" திருநெல்வேலி மாநகர காவல் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், காவல் உதவி கமிஷனர் (பாளையங்கோட்டை சரகம்) சுரேஷ், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.