விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்

கூட்ட நெரிசலை தவிர்க்க விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.;

Update:2025-06-18 00:25 IST

சென்னை,

கோடை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரத்தில் இருந்து வரும் 21,22,28,29 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) காலை 4.15 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06109), அதேநாள் காலை 11.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து வரும் 21,22,28,29 ஆகிய தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06110), அதேநாள் இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்