குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

ஐந்தருவி, மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது.;

Update:2025-10-28 01:36 IST

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழைப்பொழிவு குறைந்துவிட்டதால் குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில், குற்றாலத்தையொட்டி அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் மாலையில் ஐந்தருவி, மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்து வெள்ளப்பெருக்காக மாறியது. எனவே பாதுகாப்பு கருதி, 2 அருவிகளிலும் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் போலீசார் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்