இது சினிமா அல்ல; ரியல் ஆட்டம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.;

Update:2026-01-10 06:03 IST

கடலூர்,

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலில் கதாநாயகனுக்கும், ஜனநாயகனுக்கும் போட்டி கிடையாது. இது சினிமா அல்ல, ரியல் ஆட்டம். சினிமாவில் வேண்டுமானால் எதுவும் நடக்கலாம். ஜனநாயகன் அதிகாரத்தை நோக்கி வருகிறது. நாங்கள் அதிகாரத்தை நோக்கி வரவில்லை. நாங்கள் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவர போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

தமிழகம், இந்த அளவுக்கு முன்னேறியதற்கு தி.மு.க.வின் உழைப்பே காரணம். பல போராட்டங்கள், அடக்கு முறைகளை எதிர்த்து ரியலாக போராடிய இயக்கம் தி.மு.க. அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணி என்பது ஒரு பழைய சோறு. தி.மு.க. வலுவான இயக்கமாக உள்ளது. தமிழக அரசின் சாதனைகளை பார்த்து, மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. அந்த கட்சிக்கும் தகுதி இல்லை. மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளன. அதனால் எங்களுடன் கூட்டணி சேர்ந்து, மக்கள் பணியாற்ற பல கட்சிகள் விரும்புகின்றன. அதனால் விரைவில் பல்வேறு கட்சிகள் தி.மு.க.வில் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்