தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேர், மெஞ்ஞானபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைகண் மகன் கார்த்திக் (வயது 26), சாத்தான்குளம் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகம்(51) ஆகிய 2 பேரும் மெஞ்ஞானபுரம் பகுதியில் கடந்த 10.10.2025 அன்று நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஆவர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் கார்த்திக், ஆறுமுகம் ஆகிய 2 பேரையும் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய போலீசார் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.