தூத்துக்குடி: கோவில் கொடை விழாவில் கோஷ்டி மோதல்- 4 பேர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவின் போது மது போதையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது.;
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவின் போது மது போதையில் இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காத்தமுத்து மகன் சேதுபதி (வயது 29), பெரியசாமி மகன் பாலாஜி(29), சாந்தகுமார் மகன் ராபின்(25), நாராயணன் மகன் பத்திரபாண்டி(40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து நீதின்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.