தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.;
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம், பேய்குளம் பகுதியைச் சேர்ந்த தேவதிரவியம் மகன் மைக்கேல்(எ) ராஜமைக்கேல் (வயது 40) என்பவரை நேற்று (10.04.2025) சாத்தான்குளம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.