திருநெல்வேலி: சண்டையை சமரசம் செய்தவருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

களக்காடு பகுதியில் அண்ணன்-தம்பி இடையிலான சண்டையை அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் தடுத்து சமரசம் செய்துள்ளார்.;

Update:2025-09-09 16:00 IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, கடம்போடு வாழ்வு, மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், அவரது அண்ணன் சுடலைகண்ணு ஆகிய 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் தடுத்து சமரசம் செய்துள்ளார்.

அதனை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் ராமலிங்கமும் அவரது தாயாரும் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் அவர்கள் 2 பேரையும் அசிங்கமாக பேசி, ராமலிங்கத்தை கையால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

இதுகுறித்து ராமலிங்கத்தின் தாயார் ராமலட்சுமி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ராமகிருஷ்ணனை நேற்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்