இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-06-2025

Update:2025-06-10 08:54 IST
Live Updates - Page 2
2025-06-10 10:41 GMT

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தென்காசி. திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 




2025-06-10 09:36 GMT

தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025-06-10 09:20 GMT

தேர்தல் விதிமீறல் வழக்கில் இருந்து அமைச்சர் எ.வ.வேலு விடுவிப்பு

2011-ம் ஆண்டு தேர்தலின்போது விதிகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து அமைச்சர் எ.வ.வேலுவை திருவண்ணாமலை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. உரிய ஆதாரங்கள் இல்லாததால் எ.வ.வேலு விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

2025-06-10 09:15 GMT

பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம்

பா.ம.க. சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அவருக்கு பதில் வழக்கறிஞர் கோபு நியமனம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2025-06-10 09:11 GMT

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2025-06-10 07:40 GMT

மீன் பிடிக்க வேண்டாம் - அதிகாரிகள் வலியுறுத்தல்

  • தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவி உள்ளதால் மீன் பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவிப்பு
  • "ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் தொடர்பாக மீனவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்"
  • தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தல்

2025-06-10 06:13 GMT

பெங்களூரு நெரிசல் சம்பவம் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ள நிலையில், கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து விளக்கம் அளிக்க சித்தராமையா இன்று காலை டெல்லி சென்றார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சித்தராமையா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, பெங்களூர் நெரிசல் சம்பவம்  குறித்து கட்சி மேலிடத்திற்கு சித்தராமையா விளக்கம் அளித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

2025-06-10 05:38 GMT

"எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகப்பெரிய கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர், திமுக அரசு வீட்டுக்கு போக வேண்டிய அரசு, மக்கள் தெளிவாக உள்ளனர், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு"-  அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

2025-06-10 05:22 GMT

  • மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் வலியுறுத்தல்
  • இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள இவர், தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்ரமணியனைச் சந்தித்து கோரிக்கை
  • தேர்தல் நடத்தும் அதிகாரி அவரின் முறையீட்டை ஏற்க மறுப்பு

2025-06-10 05:04 GMT

வணிக வளாகங்கள் வழியாக மெட்ரோ வழித்தடம்

நாட்டிலேயே முதல் முறையாக வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ வழித்தடம் அமைக்க சென்னை மெட்ரோ திட்டம்

சென்னை திருமங்கலத்தில் அமையும் புதிய ரயில் நிலைய வடிவமைப்பு திட்டத்தில் புதிய முயற்சி 

Tags:    

மேலும் செய்திகள்