சென்னை மெரினாவில் தூய்மை பணியாளர்கள் கைது
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை முன்பு போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா-ரஷியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று தொடக்கம்
இந்தியா மற்றும் ரஷியாவின் ராணுவ படைகளிடையே 'ZAPAD 2025' என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. இன்று (10-ந்தேதி) தொடங்கி வரும் 16-ந்தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. ரஷியாவின் நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆசிய கோப்பை: பாக்.கேப்டனுடன் கை குலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ்..? உண்மை நிலவரம் என்ன..?
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆஹாவுடன் கை குலுக்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் இரு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்குவதை தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டு விலகிச் செல்வதை போல் வீடியோ வைரலானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலம்; ரூ.1,600 கோடி நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ரூ.20,000 கோடி நிதி வழங்க வேண்டும் என பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சோபி டெவின் தலைமையிலான அந்த அணியில் சுசி பேட்ஸ், லியா தஹுஹு, மேடி கிரீன் போன்ற முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமகவின் கட்சிக்கும், சின்னத்திற்கும் உரிமை கோரி அன்புமணி வழக்கு தொடுத்தால் தங்கள் தரப்பிடம் விளக்கம் கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என சென்னை ஐகோர்ட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு, வேளச்சேரி, மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை: சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா..? இந்திய கேப்டன் நகைச்சுவை பதில்
சுப்மன் கில் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியதுடன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் அபிஷேக் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என தகவல்கள் வெளியாகின.
காவல்துறையினர் விழிப்புடன் இருக்க உத்தர பிரதேச முதல்-மந்திரி உத்தரவு
நேபாளத்தை ஒட்டிய உத்தரபிரதேசத்தின் எல்லை மாவட்டங்களில் 24 மணி நேரமும் காவல்துறையினர் உஷாராக இருக்க உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் சினிமாவில் நடிக்க தடை இல்லை: ஆந்திர ஐகோர்ட்டு உத்தரவு
ஜனசேனா கட்சி தலைவரும், துணை முதல்-அமைச்சருமான பவன் கல்யாண் நடித்த ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டிக்கெட் விலையை மாநில அரசு உயர்த்தி விற்பனை செய்ய அனுமதித்தது. இந்நிலையில், மாநில துணை முதல்-அமைச்சர் பவன் கல்யாண் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், துணை முதல்-அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனவும் ஆந்திர ஐகோர்ட்டி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான விஜய் குமார் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நீதிபதி வெங்கட ஜோதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் படங்களில் நடிக்க எந்த தடையும் இல்லை என ஐகோர்ட்டு தெளிவுபடுத்தி உள்ளது. இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சரும், திரைப்பட நடிகருமான என்டிஆர் வழக்கில் ஐகோர்ட்டு ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கியதை நினைவுகூறப்பட்டது. மேலும் இவ்வழக்கின் விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.