இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025

Update:2025-09-16 09:06 IST
Live Updates - Page 5
2025-09-16 04:49 GMT

வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


வைஷாலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில், சிறந்த சாதனை செய்துள்ள வைஷாலிக்கு வாழ்த்துக்கள். அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும் முன்மாதிரியானவை. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.


2025-09-16 04:29 GMT

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் கலக்கம்

தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ,82,240க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்த இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

2025-09-16 04:20 GMT

இரண்டாவது திருமண வதந்திகளால் வேதனையடைந்தேன்-மீனா

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மீனா தனது கணவர் வித்யா சாகரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்தார். வித்யா சாகர் 2022-ல் நுரையீரல் தொற்று காரணமாக 48 வயதில் காலமானார்.

இதனையடுத்து, தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், அவர் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு ஆளானார்.

2025-09-16 03:55 GMT

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்


அதிகாலையிலேயே சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி அங்கு தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்தபின் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவை சந்திக்கும் முன் இன்று சி.பி. ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் எடப்பாடி பழனிசாமி தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


2025-09-16 03:55 GMT

''லோகா''வின் வெற்றி...'அது சரியான செயல் இல்லை' - ''திரிஷ்யம்'' பட இயக்குனர் எச்சரிக்கை

''திரிஷ்யம்'' படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் லோகா: சாப்டர் 1 - படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசினார்.

2025-09-16 03:53 GMT

வர்த்தக ஒப்பந்தம்.. இந்திய அதிகாரிகளுடன் அமெரிக்க குழு தலைவர் இன்று பேச்சுவார்த்தை


அமெரிக்க குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பேச்சுவார்த்தை, 6-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக அமையும் என்று மத்திய வர்த்தக அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


2025-09-16 03:53 GMT

வேகம் குறையாத ''லிட்டில் ஹார்ட்ஸ்''...10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

ஒரு காதல் படமாகத் திரைக்கு வந்த ''லிட்டில் ஹார்ட்ஸ்'', தற்போது பார்வையாளர்களை ஈர்த்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.

2025-09-16 03:52 GMT

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு.. இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு இன்று ஒருநாள் (செவ்வாய் கிழமை) கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது மத்திய அரசு. கடைசி நாளான நேற்று வருமான வரி இணையதளம் முடங்கியதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2025-09-16 03:52 GMT

பிக்பாஸ் மலையாளம் - தன்பால் ஈர்ப்பாளர் பற்றி இழிவுப் பேச்சு: மோகன்லால் கண்டனம்

மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்பால் ஈர்ப்பு இணையரை இழிவாக பேசிய போட்டியாளர் வேத்லட்சுமிக்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான மோகன்லால் கண்டனம் தெரிவித்தார்.

2025-09-16 03:51 GMT

''மிராய்'' படத்தில் ஸ்ரீ ராமராக நடித்தவர் யார் தெரியுமா? 

தேஜா சஜ்ஜாவின் சூப்பர் ஹீரோ திரைப்படமான மிராய் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா சரண், ஜகபதி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படம், கவர்ச்சிகரமான கதை, பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் ஆகியவற்றால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்