இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

Update:2025-08-17 09:21 IST
Live Updates - Page 3
2025-08-17 06:54 GMT

திருமா சிற்றன்னை மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத்தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவை தெரிவித்தார். அவர் கொண்டிருந்த பாசத்தையும், மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும் உணர்ந்து கண்கள் கலங்கினேன் என்று கூறினார்.

2025-08-17 06:53 GMT

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி


மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், வரும் 19ம் தேதி அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரைகளை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2025-08-17 06:43 GMT

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: “ஆவணங்கள் பறிமுதல்” - அமலாக்கத்துறை தகவல்

சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவருடைய மகன், மகள், நூற்பாலை ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்படி சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், செல்போன், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன என்றும், பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2025-08-17 06:20 GMT

ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு


புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. 


2025-08-17 05:35 GMT

கவர்னர் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தருமபுரி மாவட்டத்துக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்நிகழ்வில் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறும் கவர்னர், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளைப் பார்த்து, பாஜக ஆளும் மாநிலங்களில் போய்தான் கம்பு சுற்ற வேண்டும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக பேசிவரும் கவர்னரை வைத்து பாஜக தனது இழிவான அரசியலை செய்கிறது

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம்தான் முதலில் உள்ளது. கவர்னர் அவர்களே.. நீங்கள் கம்பு சுத்த வேண்டியது பாஜக ஆளும் மாநிலங்களில்தான். தமிழ்நாட்டில் இல்ல. அங்க போய் கம்பு சுத்துங்க”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். 

2025-08-17 05:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ரெயில்வே கேட் நேற்று காலை ரயில் கடக்கும் போது மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2025-08-17 05:19 GMT

சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

2025-08-17 05:16 GMT

ஆசிய கோப்பை: பும்ரா விளையாடுவாரா ?


இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பும்ரா விளையாட உள்ளார் .இது இந்திய அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.



2025-08-17 05:13 GMT

பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?


தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


2025-08-17 05:10 GMT

திருச்செந்தூர் கடலில் நீராடியபோது அலையில் சிக்கி கால் முறிவு - கவனமாக கடலில் நீராட அறிவுறுத்தல்


கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 5 பேரையும் கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து பக்தர்கள் அலையில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்