நாளை முதல் இந்திய விமானப் பராமரிப்புப் பொறியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்
அனைத்து இந்திய விமானப் பராமரிப்புப் பொறியாளர் சங்கத்தினர்(AIAMEU) நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வரும் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து இந்த வேலைநிறுத்தத்தை அவர்கள் நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (18-09-2025) கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை (19-09-2025) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. ராகுல் காந்தி கூறியதுபோல் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை. 2023-ல் அலந்த் தொகுதியில் பெயரை நீக்க சில முயற்சி நடந்தபோது, அதுபற்றி தேர்தல் ஆணையமே புகார் தந்தது.
அலந்த் தொகுதியின் 2018-ல் பாஜக வேட்பாளரும், 2023-ல் காங்கிரஸ் வேட்பாளருமே வென்றனர் என வாக்காளர் பட்டியலில் முறைகேடு என ராகுல் காந்தி அளித்த பேட்டியை பகிர்ந்தது தேர்தல் ஆணையம் எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளது.
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் என்னென்ன.. முழு விவரம்
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன.
மூச்சுத் திணறும் காசா... ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை
காசாவில் நடைபெறும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 2023ம் ஆண்டு நடத்த வாக்காளர் பட்டியல் மோசடி வழக்கில் தேவையான ஆதாரங்களை ஒரு வாரத்திற்குள் கர்நாடக சிஐடிக்கு தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும்.
இல்லையெனில், நீங்கள் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கவில்லை என்றே மக்கள் நம்புவார்கள். தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை தேர்தல்: மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்? என கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் விவகாரம்.. திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்
புதுக்கோட்டையில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தோட்டத்தில் அரிவாள் வெட்டுக்காயங்களுடன் தமிழரசன் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எம்.புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழரசன் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்
உத்தரகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் பேரிடர் பாதித்த நந்தநகரில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயமாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்
தவெகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கும் விதமாக 234 தொகுதிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை அணியின் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ’வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.