இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026

Update:2026-01-21 10:18 IST
Live Updates - Page 5
2026-01-21 05:06 GMT

பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம் 


பாகிஸ்தானில் இரும்பு தடிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று சியால்கோட் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியானார்கள்.

2026-01-21 05:05 GMT

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் விலை குறைந்துள்ளது: டாவோஸ் மாநாட்டில் மத்திய மந்திரி ஜோஷி பேச்சு 


சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 56-வது உலக பொருளாதார மாநாடு 23-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து மத்திய மந்திரிகள், மராட்டியம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர்.

2026-01-21 05:04 GMT

அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல் 


மேக்ரானை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று டிரம்ப் கூறினார்.

2026-01-21 05:03 GMT

உலக பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவை: வெள்ளை மாளிகையில் டிரம்ப் பேச்சு 


நேட்டோ அதிக மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயங்களை நாங்கள் செய்ய போகிறோம் என டிரம்ப் கூறியுள்ளார்.

2026-01-21 05:01 GMT

வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு 


அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.

2026-01-21 05:00 GMT

‘ஜெட்’ வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை.. இதுதான் காரணமா..? 


இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.350 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2026-01-21 04:58 GMT

4-வது குழந்தைக்கு பெற்றோராகும் அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ்-உஷா தம்பதி 


அமெரிக்கர்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன் என வான்ஸ் பேசினார்.

2026-01-21 04:57 GMT

இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பெரும் பங்கு வகிக்கிறது: திரிபுரா மாநில தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து 


பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் என இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து திரிபுராவின் பயணம் அமைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

2026-01-21 04:55 GMT

எம்.எல்.ஏ பதவி ராஜினாமா: திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம் 


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்பாக, தனது எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார். ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார்.

2026-01-21 04:53 GMT

சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல்: சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு 


இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்