இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 21-09-2025

Update:2025-09-21 09:10 IST
Live Updates - Page 3
2025-09-21 07:45 GMT

நாகை, திருவாரூர் மக்கள் அளித்த வரவேற்பும், காட்டிய அன்பும் நிகரில்லாதவை - விஜய் நன்றி


தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி கடந்த 13-ந்தேதி திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று அவர் நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும், நம் மீது காட்டிய அன்பும், பாசமும் நிகரில்லாதவை என்று விஜய் கூறியுள்ளார். 

2025-09-21 07:42 GMT

வங்காளதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு


வங்காளதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 11.49 மணியளவில் ரிக்டர் 4.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிவு மையம் தெரிவித்துள்ளது.


2025-09-21 07:42 GMT

 ‘ஆண் பாவம் பொல்லாதது’

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துள்ள ‘ஆண் பாவம் பொல்லாதது’ படம் அக்.31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

 

2025-09-21 07:38 GMT

"ரூ.40 கோடி செலவு"

"நடிகர் சங்க கட்டடிடத்திற்கு ரூ.40 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது, ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளோம். கட்டிடத்தை எப்படி முடிக்க போகிறோம் என பயம் இருந்தது, எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது" - நடிகர் கார்த்தி

2025-09-21 07:18 GMT

சினிமா கவர்ச்சியால் கூட்டம் கூடும்: விஜய்க்கு துணிச்சல் இல்லை: ஆளூர் ஷாநவாஸ்


விசிக நிர்வாகி ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பத்திரிகையாளர்களை சந்திக்க தலைவர் விஜய்க்கு துணிச்சல் இல்லை. ஆளுநர் ரவி, அண்ணாமலை இடத்தை விஜய் நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை. நாகை தொடர்பாக விஜய் பேசியதில் எனது ஒரு கேள்விக்கு பதிலளிக்கட்டும்.

நடிகராக விஜய் நாகை வந்தாலே அவருக்கு இவ்வளவு கூட்டம் கூடும். விஜய்யின் புகழ் என்பது சினிமாவின் மூலம் கிடைக்கக்கூடிய புகழ். நாகையில் முழுக்க முழுக்க பொய்த்தகவல்களை பரப்பிவிட்டு சென்றுள்ளார். இப்படியே போனால் விஜய் மக்களால் நிராகரிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

2025-09-21 07:14 GMT

சர்வதேச டி20 கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.


2025-09-21 06:50 GMT

''65ஆயிரம் மனிதர்களின் உயிர் உருவப்பட்டிருக்கிறது...தாங்க முடியவில்லை'' - வைரமுத்து

இஸ்ரேல்- பாலஸ்தீன போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருக்கிறார். 

2025-09-21 06:45 GMT

உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் ஆனந்த்குமார் மீண்டும் தங்கம் வென்று அசத்தல்


உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனாவில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற 42 கி. மீ ஸ்கேட் மாரத்தானில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்தகுமார் வேல்குமார் (22) தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.


2025-09-21 06:16 GMT

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். அவருடன் தமிழ்நாடு பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனனும் உடனிருந்தார்

தனது சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளுடன் சென்று அழைப்பு விடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-09-21 06:11 GMT

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடிகர் நாசர் தலைமையில் சென்னை தேனாம்பேட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ரோபோ சங்கர், ராஜேஷ் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்