இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

Update:2025-11-08 09:06 IST
Live Updates - Page 2
2025-11-08 10:13 GMT

சட்டசபை தேர்தல்; கிருஷ்ணகிரி தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் எச்சரிக்கை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் பணிகள் குறித்து தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்படி, கிருஷ்ணகிரி தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தொகுதியில் கட்சி செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் உள்ள குழப்பங்களால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளது என்பதால் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளுக்கு தி.மு.க.வினர் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

2025-11-08 09:52 GMT

ஆந்திரா - கொல்லம் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, ஜனவரி 11, 18, 2026) பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். அதே நாளில் இரவு 9.50 மணிக்கு ரேணிகுண்டாவையும், 10.36 மணிக்கு கோடூரையும், 11.08 மணிக்கு ராஜம்பேட்டையையும், 11.53 மணிக்கு கடப்பாவையும் சென்றடையும். இது நள்ளிரவு 12.28 மணிக்கு எர்ரகுன்லாவையும், மதியம் 12.53 மணிக்கு புரோட்டாத்தூரையும் சென்றடையும். பயணிகளின் வசதிக்காக ஆந்திரா மற்றும் கேரளா இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

2025-11-08 09:49 GMT

காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி, மத மோதலை உருவாக்குகிறது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 6-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்து முடிந்தது. இதில் 64.66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, 2-வது கட்ட தேர்தல் வருகிற செவ்வாய் கிழமை நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

2025-11-08 09:00 GMT

மோசமான வானிலையால் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

2025-11-08 08:20 GMT

உருவகேலி செய்வதை ஏற்க முடியாது- கவுரி கிஷன் அறிக்கை


ஒருவரின் உடல் அமைப்பு அல்லது தோற்றத்தை குறிவைக்கும் கேள்விகள் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.


2025-11-08 08:16 GMT

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..?


கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


2025-11-08 07:37 GMT

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச.1-ம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் டிச.1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் கிரண் ரிஜுஜு தெரிவித்துள்ளார்.

2025-11-08 07:33 GMT

ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர் படுகாயம்


ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பராமுல்லாவில் இருந்து பனிஹால் வரை செல்லும் ரெயிலில் இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது.


2025-11-08 07:31 GMT

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


காணொலி காட்சி வாயிலாக நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்