அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக கட்டிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புதிய மருத்துவமனையை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்தார்.
தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம் அருகே ரூ. 110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு
பாமக நிறுவனர் என்ற முறையில் பொதுக்குழுவில் பங்கேற்க ராமதாசுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.
அன்புமணி தரப்பில் நடத்தப்படும் பொதுக்குழு பேனரில் ராமதாசின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
டெல்லி: மோசமான வானிலையால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
டெல்லியில் வெளுத்து வாங்கிய கனமழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. .
முன்னதாக வானிலை மையம் சார்பில் இன்று டெல்லிக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்
மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடித் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, வெகுவிமர்சையாக திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
திருத்தேரில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகின்றனர்.
காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லாத அவல நிலை - ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதன்படி 1 லட்சம் கனஅடி காவிரி நீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என்றும், பாசன வாய்க்கால்களை தூர்வாரி, கிளை வாய்க்கால்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்
கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6ஆவது மண்டல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த 21-ம் தேதி முதல் 17,147 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
மண்டலம் 5, 6-ல் (ராயபுரம், திருவிக நகர்) தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 75 ஆயிரத்து 560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 9 ஆயிரத்து 445க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 17,000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக நீர்வரத்து குறைந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆயுத கொள்முதல் நிறுத்தமா? - மத்திய அரசு மறுப்பு
டிரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவிடம் ஆயுதம் வாங்கும் திட்டத்தை நிறுத்தியதாக பரவும் தகவலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு கொள்முதல் செயல்முறைகள், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருவதாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் பயங்கர விபத்து: சிறுமி உள்பட 21 பேர் பலியான சோகம்
கென்யாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.