இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-10-2025

Update:2025-10-09 09:44 IST
Live Updates - Page 2
2025-10-09 13:16 GMT

இருமல் மருந்து விவகாரம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டு உள்ளார். இதேபோன்று, தமிழகத்தில் செயல்பட கூடிய, கோல்ட்ரிப் எனப்படும் இருமல் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் குழந்தைகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது உறுதி செய்துள்ளார்.

2025-10-09 12:41 GMT

பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த 20 நாட்களுக்குள் சிறப்பு வேலைவாய்ப்புச் சட்டத்தை இயற்றுவேன் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார். 

2025-10-09 12:36 GMT

கர்நாடகாவில் மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்க முடிவு

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

2025-10-09 12:33 GMT

விடைபெறும் தென்மேற்கு பருவமழை

அக்டோபர் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.16- 22 காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை விடைபெற்று விடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

2025-10-09 12:31 GMT

கரூர் வருவதற்கு எதற்கு அனுமதி? விஜய் தாராளமாக வரலாம்.. அண்ணாமலை பேட்டி


இந்தியாவில் உள்ள சில பகுதிகளைப் போல அச்சுறுத்தல் காரணமாக அனுமதி பெற்று செல்ல வேண்டிய அவசியம் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு பாதுகாப்பானது என்றார்.

2025-10-09 11:24 GMT

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2025ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-10-09 10:46 GMT

உயிரை பறித்த செல்பி

சீனா: சிசுவான் மலை சிகரத்தில் ஏறி, பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி செல்ஃபி எடுக்க முயன்ற 31 வயதான மலையேற்ற வீரர் கீழே விழுந்து உயிரிழந்த சோகம். வீரர் கீழே விழும்போது உதவ முடியாமல் மற்ற வீரர்கள் நின்ற காட்சி வைரலாகி வருகிறது.

2025-10-09 10:42 GMT

த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளரை 2 நாட்கள் விசாரணைக் காவலில் அனுப்ப மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை, 2 நாட்கள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி.க்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025-10-09 10:32 GMT

நாட்டில் முதன்முறையாக... 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள்: கெஜ்ரிவால் பெருமிதம்

பஞ்சாப்பின் பதிண்டா நகரில் 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்களை தொடங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் பேசினார்.

அப்போது அவர், இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, எந்த அரசும் தன்னுடைய குடிமக்களுக்காக கிராமங்களில் விளையாட்டு திடல்களை கட்டியதில்லை. ஆக்கி, கிரிக்கெட், வாலிபால் மற்றும் பிற விளையாட்டுகளுக்காக 3,100 கிராமங்களில் விளையாட்டு திடல்கள் கட்டப்பட்டு வருகின்றன என பேசியுள்ளார்.

2025-10-09 10:12 GMT

புதிய உச்சத்தில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மீண்டும் சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராம் ரூ.25 உயர்ந்து ரூ.11,425க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.6 உயர்ந்து ரூ.177க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்