ஆப்கானிஸ்தான் நாட்டின் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி முதன்முறையாக இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நேற்று புதுடெல்லிக்கு புறப்பட்டார். அவருடைய இந்த பயணத்தில், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பிற அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசுகிறார்.
2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரங்களை தலீபான் அமைப்பு கைப்பற்றிய பின்னர் தலீபான் அரசை முறைப்படி ரஷியா மட்டுமே அங்கீகரித்து உள்ளது. தலீபான் அரசை இந்தியா அங்கீகரிக்காத நிலையில், இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கோல்ட்ரிப் மருந்து விவகாரம் - உரிமையாளர் ஆஜர்
ம.பியில் இருமல் மருந்து உட்கொண்ட 22குழந்தைகள் பலியான சம்பவத்தில் சென்னையில் கைது செய்யப்பட்ட கோல்ட்ரிப் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரங்கநாதனை ம.பி. அழைத்து சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கம்பம் நகராட்சி தலைவருக்கு எதிரான தீர்மானம் தோல்வி
கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் துணைத் தலைவர் சுனேதா மீது 22 உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது..
விதிப்படி 33 பேரில் 27 பேர் பங்கேற்க வேண்டிய கூட்டத்தில், 19 பேர் வந்ததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக ஆணையர் உமா சங்கர் அறிவித்தார்.
தவெக மேற்கு மாவட்ட செயலாளரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு மனு
கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு மனு அளித்துள்ளது. இதன்படி 5 நாட்கள் சிறப்பு புலனாய்வுக்குழு கஸ்டடி கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், தவெக தரப்பு வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
நீலாங்கரையில் உள்ள நடிகரும், தவெக தலைவருமான விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட நபர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்; இதனைத்தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தநிலையில், சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பணியாற்றும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மேயரின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை மேயரின் கணவர் பொன்வசந்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி முறைகேடு வழக்கில், 4 வாரத்துக்கு தினமும், மாவட்ட குற்றவியல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுமாறு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு: டிடிவி தினகரன்
ஒரேநாள் இரவில் 47 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லாருக்கும் எல்லாம் எனும் நம் பயணத்தில் சமத்துவத் துக்கான அவரது போராட்டங்கள் தொடர்ந்து வழிகாட்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
ஓடிடியில் வெளியாகும் "லோகா" திரைப்படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
தியேட்டர்களில் ஹிட் கொடுத்த "லோகா" படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.