கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை நிரந்தரமாக மூடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது: உதயநிதி
எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
"திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு இதுதான்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவையில் அடுத்த மாதம் ரூ.175 கோடியில் செம்மொழிப் பூங்காவை திறக்க உள்ளோம். விரைவில் பெரியார் நூலகம். கிரிக்கெட் ஸ்டேடியம் என அடுத்தடுத்து திறக்க உள்ளோம். தொழில் நகரமான கோவை வளர்ச்சிக்கு துணை நிற்கும். திராவிட மாடல் அரசின் பயணம் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படும் - சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தப்படும் என்றும், மாநில வாரியாக சிறப்பு திருத்த அட்டவணை தனியாக அறிவிக்கப்படும் என்றும் சுப்ரீம்கோர்ட்டில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயாவின் மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
கோவையில் 4 வழித்தட மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாக திகழும் கோவை- அவினாசி ரோடு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை கோல்டுவின்ஸ் பகுதியில் திறந்து வைத்தார். பின்னர் நடந்து சென்றும், காரில் பயணித்தபடியும் பாலத்தை பார்வையிட்டார்.
பிரதீப் ரங்கநாதனின் "டியூட்" பட டிரெய்லர் வெளியானது!
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள 'டியூட்' படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை கொடிசியா மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாடு 2025ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாற்றுத்திறனாளிகள் 5 பேர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 4 பேருக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து உலக புத்தொழில் மாநாட்டில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் , “உலகின் தலை சிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதுதான் திராவிட மாடல் அரசின் மாபெரும் கனவு. கடந்த 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் தளத்தில் புதிதாக பதிவாகி உள்ளன. 2032ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் எனக்கு பர்ஷனலா மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த 12 ஆயிரத்தில் சரிபாதி பெண்கள் தலைமையேற்று நடத்துகிற நிறுவனங்கள் தான்” என்று கூறினார்.
தமிழ்நாட்டை உலகின் முன்னணி ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்த மாநாடு நடைபெறுகிறது. புத்தொழில் மாநாட்டில் 42 நாடுகளை சேர்ந்த 300 பிரதிநிதிகள், 30 ஆயிரம் பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்கம்: 2 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி உத்தரவு
அதிமுகவின் 54-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி 2 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? சீமான்
இது தமிழ்ப்பேரினத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அவமதிப்பாகும் என சீமான் தெரிவித்துள்ளார்
22 ஆண்டுகால திரையுலக பயணம் குறித்து நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி பதிவு
திரையுலகில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.