புதுச்சேரியில் பள்ளி மதிய உணவு திட்டத்தில் இனி தினமும் முட்டை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும். வலுவான இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். மாநில பாடத்திட்டத்தில் 1.09 கோடி மாணவர்கள் படிக்கின்றனர் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக ஒரு சர்பதிவாளர் அலுவலகங்களில், 100 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு சார் பதிவாளர்கள் இருக்கும் அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் இன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் வெளியூர்களில் பணியாற்றும் வடமாநிலத்தினர் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும், விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இன்று திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலை பணிகளை செயல்படுத்தாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின்பேரில் பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் டுடேர்த்தே கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவைப்படுவதாக மத்திய மந்திரி ராம் மோகன் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 1,000 க்கும் மேற்பட்ட நாட்டுபடகு, பைபர் படகு மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரி சட்டபேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.