இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025

Update:2025-06-15 09:26 IST
Live Updates - Page 2
2025-06-15 08:18 GMT

ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்


 டி.என்.ஏ. பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.


2025-06-15 07:48 GMT

2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடக்கும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “பாமகவால் தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுக்க முடியும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி அமையும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். 2026ல் பாமக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது கோபம் இருந்தால் அய்யா ராமதாஸ் என்னை மன்னிக்க வேண்டும். 100 வருடம் மகிழ்ச்சியோடு ராமதாஸ் வாழ வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்றும் பெரிதல்ல” என்று அவர் கூறினார். 

2025-06-15 07:34 GMT

சிலர் பிற்போக்குத்தனமாக பேசுகின்றனர் - த.வெ.க கல்வி விருது விழாவில் மாணவி பேச்சு


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேச்சுக்கு, தமிழக வெற்றிக் கழக கல்வி விருது விழாவில் மாணவி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “எங்கள் தலைவருக்கும் எங்களுக்கும் உள்ள உறவு, தாய்மாமன் உறவு, தாய்க்கே இல்லாத உரிமை தாய்மாமனுக்கு உண்டு, 2 கிராம் தங்கத்திற்காக வருவதாக பிற்போக்குத்தனமாக சிலர் பேசுகின்றனர்” என்று மாணவி கூறினார்.

2025-06-15 07:26 GMT

இங்கிலாந்து போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்: காரணம் என்ன..?

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், இங்கிலாந்து நாட்டின் F35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.

எரிபொருள் அவசரநிலையைக் காரணம் காட்டி, அந்த விமானம் உடனடியாக தரையிறங்க அனுமதி கோரிய நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் அந்த விமானத்திற்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-06-15 07:11 GMT

கள் இறக்கும் போராட்டம்.. பனை மரம் ஏறிய சீமான்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழ்நாட்டில் கள் மீதான தடையை நீக்கக்கோரிய சீமான் பனை மரம் ஏறி, கள் இறக்கி போரட்டத்தில் ஈடுபட்டார். 

2025-06-15 06:57 GMT

கோவை: நீட் தேர்வு முடிவில் குளறுபடி என மாணவி குற்றச்சாட்டு


நீட் தேர்வில் 680 மதிப்பெண் பெற்று 40ஆவது ரேங்க் எடுத்த மாணவி பெயர் டாப் 100 இடங்களுக்கான பட்டியலில் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

680 மதிப்பெண்கள் பெற்ற கோவை மாணவி அபிஷியாவுக்கு 88.296852 பர்சன்டைல் வழங்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

680 மதிப்பெண்கள் எடுத்தால் 99.985 முதல் 99.997 வரையிலான பர்சன்டைல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

2025-06-15 06:10 GMT

திருவண்ணாமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

2025-06-15 06:01 GMT

பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம் - ராமதாஸ் அறிவிப்பு


பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாமக பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கப்பட்டு முரளி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2025-06-15 05:52 GMT

வைகை அணையில் தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பெரியசாமி மதகை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து விநாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

2025-06-15 05:49 GMT

விஜய்யை, நிர்வாகி ஒருவர் சந்தித்ததாக வெளியான தகவலுக்கு ஜாக்டோ ஜியோ மறுப்பு

விஜய்யை நிர்வாகி ஒருவர் சந்தித்ததாக வெளியான தகவலுக்கும், ஜாக்டோ ஜியோ சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பழைய ஓய்வூதிய கோரிக்கை குறித்து விஜய்யை மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தித்துப் பேசியதாக வெளியான தகவலுக்கு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்