இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025

Update:2025-10-15 10:01 IST
Live Updates - Page 3
2025-10-15 04:57 GMT

ரூ.15,000 கோடி முதலீட்டுக்கு உறுதியா? பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்திற்கு உரிமையாளர் டி.ஆர்.பி. ராஜாவா? - கே. பாலு


புதிய முதலீடுகள் குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பதை அறிக்கை மூலம் பாக்ஸ்கான் நிறுவனமே தெளிவுபடுத்தி விட்டது என கே. பாலு தெரிவித்துள்ளார்.


2025-10-15 04:54 GMT

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையோரம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புழல் ஏரியிலிருந்து இன்று மதியம் 2 மணிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

2025-10-15 04:49 GMT

கட்டுரையில் புகழ்ச்சி... அட்டை படத்தில் காலை வாரிய செய்தி நிறுவனம்; கடும் கோபம் கொண்ட டிரம்ப்


நான் ஒருபோதும் கீழே இருந்து ஒரு கோணத்தில் எடுக்கும் புகைப்படங்களை விரும்புவதில்லை என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.


2025-10-15 04:48 GMT

"பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" - மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக கண்டனம்


பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது


2025-10-15 04:47 GMT

விண்ணை முட்டும் விலையேற்றம்.. தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதா..?


இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி வரலாறு படைத்துள்ளது.


2025-10-15 04:45 GMT

ஹர்ஷித் ராணா தேர்வு: ஸ்ரீகாந்துக்கு கம்பீர் பதிலடி


இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் சமீபத்தில் விமர்சித்து இருந்தார். 'தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு நிரந்தர வீரர்தான் இருக்கிறார். அவர் எதற்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிலர் நன்றாக ஆடினாலும் அணியில் இடமில்லை. சிலர் சரியாக ஆடாவிட்டாலும் அணியில் இடம் கிடைக்கிறது. அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல' என ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.


2025-10-15 04:44 GMT

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்


முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது.



2025-10-15 04:43 GMT

தீபாவளிக்கு ஏற்ற குடும்ப பொழுதுபோக்கு படம் 'டியூட்'- மமிதா பைஜு


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த டியூட், வருகிற 17 அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.


2025-10-15 04:41 GMT

தீபாவளி பண்டிகை கூட்டம் அதிகரிப்பு: மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்


மாசி வீதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர்.


2025-10-15 04:40 GMT

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து: பிரதமர் மோடி இரங்கல் - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று மதியம் சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 57 பயணிகள் பயணித்தனர்.

ஜோத்பூர் - ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்