இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-10-2025

Update:2025-10-17 09:38 IST
Live Updates - Page 3
2025-10-17 06:01 GMT

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆவணங்களை ஒப்படைத்த சிறப்பு புலனாய்வு குழு


ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று கரூர் வந்துள்ளனர்.


2025-10-17 05:59 GMT

தஞ்சாவூர்: கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி பலி


பொள்ளாச்சியைச் சேர்ந்த தம்பதியினர் ஒரு காரில் தங்களுடைய 60-ம் திருமணத்திற்காக திருக்கடையூருக்கு சென்று கொண்டிருந்தனர்.


2025-10-17 05:58 GMT

ஒரேநேரத்தில் தட்கல் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சி.. முடங்கிய ரெயில்வே இணையதளம்


தீபாவளியை ஒட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரெயில்வே இணையதளம் முடங்கி உள்ளது.


2025-10-17 05:08 GMT

சொந்த வாகனத்தில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் அபராதம்

சொந்த பயன்பாட்டிற்கான கார் உள்ளிட்ட வாகனங்களில் பணத்திற்காக பயணிகளை ஏற்றினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக வாடகைக்கு விடுவதை தடுக்க போக்குவரத்துத்துறை இந்த அறிவுறுத்தலை தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி வெள்ளை நிற பதிவெண் பலகை கொண்ட வாகனங்களை வாடகைக்கு விடுவதாக புகார் எழுந்தநிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2025-10-17 05:03 GMT

சென்னையில் பன்னாட்டு மருத்துவ மாநாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்


'நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு' என்ற நூலை மா.சுப்பிரமணியியன் வெளியிட்டார்.


2025-10-17 05:02 GMT

பாக்ஸ்கான் தொழில் முதலீடு: குடுகுடுப்பைக்காரரை போல டி.ஆர்.பி.ராஜா பேசக்கூடாது - அன்புமணி


பொய்களை முதலீடு செய்யாமல் உண்மையாகவே தொழில் முதலீடுகளை ஈர்க்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.


2025-10-17 05:01 GMT

"டீசல், டியூட், பைசன்" படங்களை ஒப்பிட வேண்டாம்.. ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!


இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கு சொந்தமானது என்று சிம்பு பதிவிட்டுள்ளார்.


2025-10-17 04:59 GMT

ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு - டிரம்ப் தகவல்


அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேசினார்.


2025-10-17 04:58 GMT

பைக் விபத்தில் சினிமா துணை நடிகர் உயிரிழப்பு


நெல்லை மாவட்டம், பேட்டை குளத்தை சேர்ந்த ராஜ் என்பவர் கிராக்கி, விதி எண்-3, உயிர் மூச்சு ஆகிய சினிமா படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


2025-10-17 04:31 GMT

அதிமுகவின் 54வது தொடக்க நாள்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

அதிமுகவின் 54வது தொடக்க நாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்