இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-10-2025

Update:2025-10-22 09:05 IST
Live Updates - Page 3
2025-10-22 08:00 GMT

’படத்துக்கு படம் ஆச்சரியப்படுத்துகிறீர்கள்’ - மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் பைசன் படத்தை பார்த்து மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கிறார்.

2025-10-22 07:58 GMT

’அதனால்தான் பெயரை மாற்றினேன்’ - ரிஷப் ஷெட்டியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

இப்போது ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பரிச்சயமான பெயர் ரிஷப் ஷெட்டி. இருப்பினும், அது அவரது உண்மையான பெயர் அல்ல. தற்போது காந்தாரா சப்டர் 1 இன் வெற்றியை அனுபவித்து வரும் ரிஷப், தனது பெயர் மாற்றத்திற்குப் பின்னால் உள்ள கதையை கூறினார்.

2025-10-22 07:57 GMT

10வது கூட தேர்ச்சி இல்லை...இப்போது படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்கும் நடிகை - யார் தெரியுமா?

பலர் இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதில் சிலர் அதிகம் படிக்காவிட்டாலும், பிரபலங்களாக மாறி உள்ளனர். இந்த நடிகையும் அவர்களில் ஒருவர்தான். இவர் 10 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை, ஆனால் இப்போது ஒரு படத்திற்கு ரூ.15-25 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரது சொத்து ரூ.200 கோடிக்கு மேல்...

2025-10-22 07:56 GMT

தனது புதிய படத்தின் முக்கிய அப்டேட்டை பகிர்ந்த ஆஷிகா

ரவி தேஜா மற்றும் ஆஷிகா ரங்கநாத் தற்போது கிஷோர் திருமலா இயக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் உள்ளனர். தற்போது ஸ்பெயினின் அழகிய கடற்கரை நகரமான வலென்சியாவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

2025-10-22 07:31 GMT

அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு

சென்னை குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகியவற்றில் முன்கூட்டியே வெள்ள நீர் திறக்கப்பட்டு போதுமான இடைவெளி பராமரிக்கப்பட்டு வருவதால், மிக கனமழை பெய்தாலும் வெள்ளநீர் திறப்பின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு அடையாறு மற்றும் கொசஸ்தலையாற்றில் பாதுகாப்பாக கடலை சென்றடையும். எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

2025-10-22 07:28 GMT

தடகளப் போட்டியில் கன்னியாஸ்திரி வெற்றி

கேரளா - வயநாடு துவாரகா எ.யு.பி. பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் 55 வயதான கன்னியாஸ்திரி சபீனா தடகள போட்டியில் மற்ற வீரர்களை விட மின்னல் வேகத்தில் முந்தி சென்று தங்கப் பதக்கம் வென்றார். சிஸ்டர் சபீனா ஒன்பதாம் வகுப்பிலே தேசிய தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றது மட்டுமில்லாமல் சிறு வயதிலேயே பல பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-10-22 07:25 GMT

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

திற்பரப்பு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று (அக்.21) தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

2025-10-22 06:57 GMT

ஊட்டியில் மலை ரெயில் சேவை 4-வது நாளாக ரத்து

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது. நீலகிரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலை ரயில் போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று (22.10.25) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை, மண் சரிவு காரணமாக ஏற்கனவே கடந்த 3 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மழைபெய்து ரயில் பாதைகளில் பாறைகள் விழுந்துள்ளதால், நான்காவது நாளாக இன்றும் (22.10.205) மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது

2025-10-22 06:10 GMT

சாலையின் நடுவே விழுந்த மின் கம்பம்

கனமழை காரணமாக, கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் மின் கம்பம் சாய்ந்து சாலையின் நடுவே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உதவியுடன் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சரி செய்யும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

2025-10-22 06:08 GMT

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்த இடங்கள் எவை...?

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. அதன்படி, எண்ணூரில் 12 செ.மீ, மதுரவாயல், நெற்குன்றத்தில் 11 செ.மீ, வடசென்னையில் 10 செ.மீ, வளசரவாக்கம், மணலியில் 9 செ.மீ, வடபழனி, அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, துரைப்பாக்கம், கொரட்டூர், விம்கோ நகரில் 8 செ.மீ, எம்.ஜி.ஆர். நகர், மத்திய சென்னை, கண்ணகி நகர் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று 1,46,950 நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்