இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025

Update:2025-11-25 09:28 IST
Live Updates - Page 2
2025-11-25 08:15 GMT

4 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 11.5 செ.மீ. வரை கனமழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

2025-11-25 08:09 GMT

திருட்டு நகையை கண்டுபிடிக்க முடியாவிட்டால் அரசு இழப்பீடு தர வேண்டும் - கோர்ட்டு அதிரடி

திருடுபோன நகையை போலீசார் கண்டுபிடிக்க முடியாவிடில், பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என வழக்கை போலீசார் முடித்து வைத்த நாளில் இருந்து 12 வாரங்களுக்குள், நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீத தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தெரிவித்துள்ளது.

நகை திருட்டு தொடர்பாக மதுரையை சேர்ந்த பெண் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2025-11-25 07:57 GMT

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு: இந்தியாவிற்குள் நுழைந்த சாம்பல் மேகங்கள்.. சென்னையில் விமானங்கள் தாமதம்

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பால் சாம்பல் மேகங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தது. இதனால் சென்னையில் இருந்து மும்பைக்கு காலையில் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம் இரண்டரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

14 கிலோ மீட்டர் உயரத்தில் சாம்பல் மேகங்கள் வந்து கொண்டிருப்பதால், டெல்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

2025-11-25 07:52 GMT

புயல் உருவாக வாய்ப்பு குறைவு - வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

மலக்கா ஜலசந்தி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி , காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது மேலும் தீவிரமடைந்தாலும், புயலாக மாறாது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27-ந் தேதிக்குள் புயலாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.

2025-11-25 07:49 GMT

தமிழகத்தில் நவ. 28,29-ந் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட்

நவம்பர் 28-ம் தேதி

நாகை

திருவாரூர்

தஞ்சாவூர்

நவம்பர் 29-ம் தேதி

சென்னை

திருவள்ளூர்.

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

விழுப்புரம்

கடலூர்

மயிலாடுதுறை

திருவாரூர்

தஞ்சாவூர்

நாகை

புதுக்கோட்டை

புதுச்சேரி

காரைக்கால்

2025-11-25 07:45 GMT

எத்தியோப்பியாவில் வெடித்த எரிமலை: இந்திய நகரங்களை சூழ்ந்த சாம்பல்.. விமான சேவை பாதிப்பு 


சுமார் 4,000 கி.மீ. தூரம் நகர்ந்து வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை எரிமலை சாம்பல் சூழ்ந்துள்ளது.

2025-11-25 07:44 GMT

கொட்டித்தீர்த்த கனமழை: திருவாரூரில் 20,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் சேதம் 


மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

2025-11-25 07:42 GMT

பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து 30-ந் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ் 


பாமகவின் தேர்தல் கூட்டணி குறித்து 30-ந் தேதி அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2025-11-25 07:41 GMT

பரபரக்கும் அரசியல் களம்: தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ந் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..! 


அ.தி.மு.க.வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மற்றொரு நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் டிசம்பர் 15-ந் தேதி வரை கெடு விதித்துள்ளார்.

2025-11-25 07:24 GMT

கோவையில் ரூ.208 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை காந்திபுரத்தில் ரூ.208 கோடியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

45 ஏக்கர் பரப்பில் 23 வகையான தோட்டங்களுடன் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அரங்கு, உணவகம், செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்