நெல்லை: பாளையஞ்செட்டிகுளத்தில் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த பெருமாள் என்பவர் 2016ல் கொலை செய்யப்பட்டார். சாட்சியம் அளித்தவரை கொன்ற வழக்கில் செல்வராஜ் என்ற நபருக்கு தூக்கு தண்டனையை ஐகோர்ட் உறுதிசெய்தது.
கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசும் - வானிலை மையம்
டிட்வா புயலால் இன்று தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ. வேகத்திலும், வட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 60 கி.மீ. வேகத்திலும் தரைக்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிச.4ம் தேதி இந்தியா வருகிறார் புதின்
ரஷிய அதிபர் புதின் 2 நாள் அரசுமுறை பயணமாக டிச.4ம் தேதி இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியதற்கு பிறகு புதினின் முதல் இந்திய பயணம் இதுவென்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. கடைசியாக 2021 டிசம்பரில், அவர் இந்தியா வந்திருந்தார்.
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
டிசம்பர் 5-ல் ஜெயலலிதா நினைவு நாள்: சென்னையில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்துகிறார்
சென்னையில் டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறம் அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாஜகவின் 'ஸ்லீப்பர் செல்' செங்கோட்டையன் - அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு
தமிழக இயற்கை வளம், நீதிமன்றம் மற்றும் சிறை துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் "பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்". நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சேர ஒரு குறிப்பிட்ட பணிக்காக அனுப்பப்பட்டவர். நீண்டகாலம் அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றிய செங்கோட்டையன், பா.ஜ.க.வால் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தப்படுகிறார். செங்கோட்டையனை நான் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல்லாகவே பார்க்கிறேன். இது விரைவில் நிரூபிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நில விபரங்களை டிச.4-ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் - தமிழ்நாடு வக்பு வாரியம்
தமிழ்நாடு வக்பு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வக்பு நிறுவனங்களின் முத்தவல்லிகள்/நிர்வாகக்குழுவினர்கள் தங்களது வக்பு நிறுவனங்களின் விபரங்களை “THE UNIFIED WAQF MANAGEMENT EMPOWERMENT, EFFICIENCY, AND DEVELOPMENT ACT, 1995-ன்படி “UMEED CENTRAL PORTAL, 2025” https://umeed.minorityaffairs.gov.in-ல் 04.12.2025-க்குள் முத்தவல்லி பதிவு மற்றும் நில விபரங்களை தவறாமல் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மிரட்டல் வழக்கில் இரண்டு பேர் விடுதலை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சாட்சியான லாட்ஜ் உரிமையாளரை மிரட்டிய வழக்கில் சயான், மனோஜ் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு முறையாக நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுவதாக கூறி நீலகிரி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
டிட்வா' புயல் எதிரொலி: தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு டிச.6-ந் தேதிக்கு மாற்றம்
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் காரணமாக 29.11.2025 அன்று நடைபெறுவதாக இருந்த "தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு" மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.