தனுஷ்கோடியில் கடல் சீற்றம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
’டிட்வா புயல்’ நெருங்கும் நிலையில் தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்”
டிட்வா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி
ராமநாதபுரம்,
புதுக்கோட்டை,
தஞ்சை,
திருவாரூர்,
நாகை,
காரைக்கால் (புதுச்சேரி) ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுடன் ஆலோசனை
டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய் படங்களுடன் தனது அலுவலகத்தில் பேனர் வைத்த செங்கோட்டையன்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய் படங்களுடன் தனது அலுவலகத்தில் செங்கோட்டையன் பேனர் வைத்த்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த தோனி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது.
டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க உத்தரவு
டியூட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாடலை நீக்க 7 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற பட நிறுவனத்தின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
மதியம் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து தவெகவில் இணையப்போகும் அதிமுக தலைவர்கள் யார்..? - செங்கோட்டையன் பதில்
மக்கள் ஆதவுடன் 2026-ல் ஆட்சிப்பீடத்தில் விஜய் அமர்வார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,
பட்ஜெட் ரூ.50 லட்சம்...வசூல் ரூ.100 கோடி?...பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த படம்
வெறும் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் நுழைய உள்ளது.
பயணிகள் கவனத்திற்கு... சென்னை ரெயில்கள் இன்று மண்டபத்தில் இருந்து புறப்படும்
ராமேசுவரம் பாம்பன் பாலம் பகுதியில் மணிக்கு 60.07 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், ரெயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.