செங்கோட்டையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டி.டி.வி. தினகரன்

மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-09 10:10 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். .

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செங்கோட்டையன் அவர்கள், நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்