உண்மையை கொண்டுவர போராடுகிறோம் - ஆதவ் அர்ஜுனா

தவெக தலைவர், நிர்வாகிகள் மீது பொய்யான தகவலை பரப்பி கைது செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.;

Update:2025-10-10 20:30 IST

சென்னை,

டெல்லியில் இருந்து சென்னை வந்த தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கரூர் சம்பவம் - விஜய் உட்பட அனைவரும் பேசமுடியாத அளவுக்கு வேதனையில் உள்ளோம். உயிரிழந்தவர்களை எங்களது குடும்பத்தினராக கருதுகிறோம். உண்மையை கண்டிப்பாக சொல்வேன்.கரூர் துயரில் இறந்தோருக்காக 16 நாள் துக்கம் அனுசரித்து வருகிறோம். எங்கள் மீதான அவதூறுகள் குறித்தும் தவறான செய்திகள் குறித்தும் தற்போது பேசத்தயாராக இல்லை. தவெக தலைவர், நிர்வாகிகள் மீது பொய்யான தகவலை பரப்பி கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.நீதித்துறையை நம்பி போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

எங்கள் மீதான அவதூறுகளை போக்கி கரூரில் நடந்தது குறித்த உண்மைகளை கொண்டு வர போராடுவோம். தவெகவை முடக்கும் நோக்கில் செயல்படுவதால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம். மதுரை ஐகோர்ட்டு அமர்வில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ஆனந்த் மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கெனவே தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தாக்கல் செய்த முன் ஜாமீன் கோரிய மனுவை தனி நீதிபதி நிராகரித்திருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்