2026ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சர் யார் ? வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவு
கருத்துக்கணிப்பில், 77.83 சதவீதம் பேர், மீண்டும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிர ஈடுபட தொடங்கிவிட்டதைக் காண முடிகிறது. பல்வேறு கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில், 2026ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்-அமைச்சர் யார் ? மக்கள் யாரை முதல்-அமைச்சராக்க விரும்புகிறார்கள் என்று, 'இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு' சார்பில் நடந்த கருத்துக்கணிப்பு நடத்திதியது. அதில்,
பிப்ரவரி 5-ம் தேதி முதல் ஜூன் 17-ம் தேதி வரை 234 சட்டமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 77.83 சதவீத பேருடன் முதலிடத்திலும், எடப்பாடி பழனிசாமி 73.30 சதவீத பேருடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் 67.99 சதவீத பேருடன் 3-வது இடத்திலும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 64.58 சதவீத பேருடன் 4-வது இடத்திலும் தவெக தலைவர் விஜய் 60.58 சதவீத பேருடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
தற்போது உள்ள சூழலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு 17.7 சதவீத பேர் திமுக என்றும், 17. 3 சதவீத பேர் அதிமுக என்றும் கூறியுள்ளனர். 12.20 சதவீத பேர் தவெக என்றும், 5 சதவீத பேர் பாஜகவுக்கு வாக்களிப்போம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.