நெல்லையில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம், சுடலை கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ஆறுமுககனி (வயது 20) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
அவர் மீது திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், ஜங்ஷன் சரகம் காவல் உதவி கமிஷனர் (பொறுப்பு) நிக்சன், திருநெல்வேலி சந்திப்பு (குற்றம்) போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரப்படி நேற்று (7.8.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.