ஈரான், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.;

Update:2025-06-14 05:41 IST

டெஹ்ரான்,

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடுத்து உள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அதன்படி, 'நடப்பு சூழலை கருத்தில் கொண்டு ஈரானில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை கடைப்பிடிக்க வேண்டும்' என கூறியுள்ளது.

இதைப்போல இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜெருசலேமில் உள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்