கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-05-31 22:44:27.0


கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகளின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் ஒரு நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடம்தேடி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளரான லெக்லெர்க் இம்ஹாப் (வயது 32) என்பவரும் பயணித்தார். அப்போது அந்த பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் லெக்லெர்க் இம்ஹாப் கொல்லப்பட்டார். அவருடன் பயணம் செய்த மற்றொரு பிரான்ஸ் பத்திரிகையாளர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

போர் குற்ற விசாரணை

இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், “போரின் யதார்த்தத்தை உலகுக்கு சொல்ல பிரான்ஸ் பத்திரிகையாளர் லெக்லெர்க் இம்ஹாப் களத்தில் பணியாற்றி வந்தார். அவர் மனிதாபிமான வழித்தடத்தில் பயணித்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதனிடையே உக்ரைன் போரில் பிரான்ஸ் பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக போர் குற்ற விசாரணையைத் தொடங்குவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.


Next Story