போர் தொடங்கிய முதல் நாளில் கார்கிவ் நகரில்... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-06-01 00:30:07.0


போர் தொடங்கிய முதல் நாளில் கார்கிவ் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது பீரங்கி குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்றதாக ரஷிய வீரர்கள் அலெக்சாண்டர் பாபிகின் மற்றும் அலெக்சாண்டர் இவனோவ் ஆகிய இருவர் மீது போர் குற்றம் சுமத்தி உக்ரைன் கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அவர்கள் இருவரும் நேற்று குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

முன்னதாக போர் குற்றத்தில் ஈடுபட்டதாக 21 வயதான ரஷிய ராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உக்ரைன் கோர்ட்டு கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story